பஹ்ரைன் நாட்டில் உலகின் மிகப்பெரிய கடலடி பொழுதுபோக்கு பூங்கா: பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
பஹ்ரைன் நாட்டில் உலகின் மிகப்பெரிய கடலடி பொழுதுபோக்கு பூங்கா: பணி தீவிரம்

மனாமா: பஹ்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கடலடி பொழுதுபோக்கு பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  கிட்டத்தட்ட  65 அடி நீளம் கொண்ட போயிங் 747 ரக விமானங்கள் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டு  செய்யப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட உள்ளது.சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 70 மீட்டர் நீளமுள்ள பிரமாண்டமான போயிங் விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்து பொழுதுபோக்கு பூங்கா அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்த விமானத்தினுள் செயற்கையாக வளர்க்கப்பட்ட பவளப்பாறைகள், சிதறிக்கிடக்கும் முத்துக்கள் போன்றவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்ட விமானத்தை சுற்றி ஏராளமான மீன்கள் வலம் வருவது போன்றும், ஸஃஉவா டைவர் ஒருவர் நீந்தி செல்வது போலவும் வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது.  இந்த பொழுதுபோக்குப் பூங்கா வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என பஹ்ரைன் தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத் பின் ரஷீட் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை