பீகாரில் முளைக் காய்ச்சல் நோயால் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு: 18 நாட்களுக்கு பின் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

தினகரன்  தினகரன்
பீகாரில் முளைக் காய்ச்சல் நோயால் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு: 18 நாட்களுக்கு பின் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

முசாபர்: பீகாரில் முளைக்காய்ச்சலால் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 18 நாட்களுக்கு பின் மத்திய சுகாதார நிபுணர் குழுவினர் ஆய்வு செய்ய முசாபர் நகர் வந்துள்ளனர். மேலும் முசாபர் நகர் பகுதியில் சிறிய குழந்தைகள் திடீரென முளைக்காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன. இந்த நோயினால் பீகாரில் கிராமங்களில் உள்ள குழந்தைகளை பெற்றோர் அச்சம் காரணமாக வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதையடுத்து 18 நாட்கள் கழித்து மத்திய சுகாதார நிபுணர் குழுவினர் நேற்றிரவு முசாபர்பூருக்கு வந்தடைந்தனர். மேலும் இந்நோய் அதிக அளவில் பரவியது எதற்காக என்று மத்திய சுகாதாரத்துறை ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது. வெயில் காரணமாக நோய் பரவுகிறதா என்று குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் குவியல் குவியலாக உயிரிழந்து பெற்றோர் கண்ணீர் விட்டு கதறும் போது அரசு இயந்திரம் செயலிழந்து விட்டதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனிடையே குழந்தைகளின் மரணம் குறித்து துணை முதலமைச்சர் சுசில் மோடியிடம் கேட்ட போது பதிலளிக்காமல் மௌனமாக வெளியேறினார். இதனையடுத்து இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இரங்களையாவது தெரிவியுங்கள் என செய்தியாளர்கள் வலியுறுத்தியபோதும் சுசில் மோடி பதிலளிக்காமல் சென்றுவிட்டார். மேலும் இதனை போன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தனது காரில் சென்றுவிட்டார்.

மூலக்கதை