உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோஹ்லி அதிரடி...பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து இந்தியா

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோஹ்லி அதிரடி...பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து இந்தியா

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறும்  போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா அணி நிர்ணயித்தது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  கேப்டன் சர்பிராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள்  இழப்பிற்கு ரன்களை குவித்தது. ஷிகர் தவானுக்கு மாற்றாக ரோகித் சர்மாவுடன் இணைந்து லோகேஷ் ராகுல் நல்ல துவக்கம் கொடுத்தனர். தொடர்ந்து விளையாடிய லோகேஷ் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த  இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி அதிரடி காட்டினார். இதற்கிடையே, அரைசதம் விளாசிய ரோகித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோஹ்லியுடன் இணைந்து அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா பாண்டியா 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மகேந்தி சிங் டோனி 2 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விராட் கோஹ்லியுடன் தமிழக வீரர் விஜய் சங்கர் இணைந்தார். இதற்கிடையே, சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்தார். 222 போட்டிகளில் விளையாடிய விராட் கோஹ்லி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மழை குறுக்கிட்டதால் 46.4 ஓவர்களில் 305 ரன்களை இந்திய அணி எடுத்த நிலையில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் போட்டி தொடங்கியது. அப்போது, இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்களும், ஹசன் அலி, ரியாஸ் தலா 1 விக்கெட்களை எடுத்தனர். இந்நிலையில், 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 6 போட்டிகளிலும் இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை