பாக்.,கிற்கு இந்தியா 337 ரன் இலக்கு

தினமலர்  தினமலர்
பாக்.,கிற்கு இந்தியா 337 ரன் இலக்கு

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன் எடுத்து பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் என கடும் இலக்கை நிர்ணயித்தது.



ரோகித் சதம்

மான்செஸ்டர் நகரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணியில் காயத்தால் விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக தமிழக 'ஆல்-ரவுண்டர்' விஜய் சங்கர் தேர்வானார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், ஷதாப் கான் இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது, 'பீல்டிங்' தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்தது.


ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார். இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தபோது, அரை சதம் அடித்த ராகுல் (57) வெளியேறினார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் (140) சதம் விளாசினார். ஆமிர் 'வேகத்தில்' பாண்ட்யா (26) சிக்கினார்.
தோனி ஒரு ரன்னில் திரும்பினார். இந்திய அணி 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது. கோஹ்லி (77) ரன் எடுத்து அவுட்டாயினர். விஜய் சங்கர் (15), ஜாதவ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர் 3 விக்கெட் வீழ்த்தினார்.


50 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டை இழந்து 336 ரன் எடுத்துள்ளது. இடையில் மழை வந்து ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மழை இல்லாமல் இருந்தால் போட்டி இன்னும் விறு, விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை