நாளை தொடங்குகிறது 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்

தினகரன்  தினகரன்
நாளை தொடங்குகிறது 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்

டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 20ந் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.

மூலக்கதை