பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள் : மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மன்னிப்பு

தினமலர்  தினமலர்
பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள் : மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மன்னிப்பு

1968ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் பாடுன்னபுழா. கிருஷ்ணன் நாயர் இயக்கிய இந்தப் படத்தில் பிரேம் நசீர், ஷீலா, ஜெயபாரதி, அடூர் பாசி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இது ரொமான்ஸ் த்ரில்லர் வகை படம்.

இந்த படம் மலையாளத்தில் வெளியான அடுத்த ஆண்டே அதாவது 1969ம் ஆண்டு தமிழில் மன்னிப்பு என்ற பெயரில் ரீமேன் ஆனது. மலையாளத்தில் இயக்கிய கிருஷ்ணன் நாயரே தமிழிலும் இயக்கினார். பிரேம் நசீர் நடித்த கேரக்டரில் ஜெய் சங்கரும், கே.பி உமர் நடித்த கேரக்டரில் ஏவிஎம்.ராஜனும், ஷீலா நடித்த கேரக்டரில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்தனர். சுப்பையா நாயுடு இசையில் “நீ எங்கே என் நினைவுகள் அங்கே....” “வெண்ணிலா வானில் வரும் நேரம் நான் விழித்திருந்தேன்...” போன்ற இனிய பாடல்கள் இடம்பெற்றிருந்தது.

மூலக்கதை