மாயபிம்பத்தில் கிராமத்து காதல்

தினமலர்  தினமலர்
மாயபிம்பத்தில் கிராமத்து காதல்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் மாயபிம்பம். கே.ஜே.சுரேந்தர் என்ற இளைஞர் தயாரித்து, இயக்கி இருக்கிறார். நந்தா இசை அமைத்திருக்கிறார், எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கே.ஜே.சுரேந்தர் கூறியதாவது:

ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக வந்திருக்கிறது. உதாரணத்திற்கு அலைகள் ஓய்வதில்லை, காதல், மைனாக்போன்ற பல படங்களை கூறலாம். அதே வரிசையில் உருவாகியுள்ள படம் தான் மாயபிம்பம். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறது. உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும். கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் படமாகி இருக்கிறது. என்றார்.

மூலக்கதை