சூரியனை முத்திமிடும் நயன்தாரா

தினமலர்  தினமலர்
சூரியனை முத்திமிடும் நயன்தாரா

சினிமாவில் முன்னணி நடிகைகள் என்ன செய்தாலும் அது செய்திதான். அதுவும் நயன்தாரா போன்றவர்கள் செய்தால் அது கண்டிப்பாகச் செய்திதான். தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிரேக்க நாட்டில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் நயன்தாரா.

சுற்றுப் பயணம் கிளம்பிய நிமிடத்தில் விமான டிக்கெட்டுகளை ஷேர் செய்வதில் இருந்து அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதன் மூலம் இந்த உலகத்திற்கு அவர் எதையோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.

பாத்டப் உள் அமர்ந்திருக்கும் நயன்தாரா காலையில் உதிக்க ஆரம்பிக்கும் சூரியனை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். வழக்கம் போல இந்த போட்டோவுக்கான கமெண்ட்டுகளுக்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

நாங்கள் வெளியிடும் போட்டோவை மட்டும் பார்த்து ரசியுங்கள், பார்த்துவிட்டு கமெண்ட் செய்யாதீர்கள் என இருவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

மூலக்கதை