'தர்பார்' படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் நிறைவு

தினமலர்  தினமலர்
தர்பார் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் நிறைவு

ஏஆர் முருகதாஸ், ரஜினிகாந்த் கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ள படம் 'தர்பார்'. நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மும்பையில் ஆரம்பமானது. தேர்தலுக்காக மட்டும் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்கள்.

மே 29ம் தேதி முதல் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் மும்பையில்தான் நடக்கிறது. ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2020 பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை