படப்பிடிப்பில் விபத்து- சந்தீப் கிஷன் மருத்துவமனையில் அனுமதி!

தினமலர்  தினமலர்
படப்பிடிப்பில் விபத்து சந்தீப் கிஷன் மருத்துவமனையில் அனுமதி!

மாயவன் படத்திற்கு பிறகு நரகாசூரன், கசடதபற படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன், தெலுங்கில் நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் தெனாலி ராமகிருஷ்ணா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கர்னூலில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெடிகுண்டை வெடிக்க வைப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்தார் சந்தீப் கிஷன், அப்போது ஸ்டன்ட் மாஸ்டர் கொடுத்த தவறான கணக்கீடு காரணமாக வெடிகுண்டு சந்தீப் கிஷனின் மீது வெடித்து விட்டதாம்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தீப் கிஷனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு மாதம் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்களாம்.

மூலக்கதை