சமந்தாவின் அதிரடி பிரமோஷன்

தினமலர்  தினமலர்
சமந்தாவின் அதிரடி பிரமோஷன்

திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் தன்னை பேச வைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு சேலஞ்சிங்கான கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கிறார் சமந்தா. அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள படம் ஓ பேபி. மிஸ் கிரான்னி என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ஜூலை 5-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், மஜிலி வெற்றிக்குப்பிறகு இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்க வேண்டும் என்று பிரமோஷன்களில் தீவிரமடைந்துள்ளார் சமந்தா. ஒவ்வொரு நாளும் ஒரு சேனலில் அமர்ந்து ஓ பேபி குறித்து அதிரடியாக பேசி வருகிறார்.

அப்போது, இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த படத்தில் ஒரு சேலஞ்சிங்கான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த வகையில், என்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிக்க எனக்கு இந்த படத்தில் ஒரு சான்ஸ் கிடைத்தது. அதை சரியாக பயன் படுத்தியிருக்கிறேன் என்று கூறி வரும் சமந்தா, இந்த படத்திற்கு பிறகு சமந்தாவை தேடி வழக்கமான கதைகளுடன் எந்த டைரக்டர்களும் வரமாட்டார்கள். வித்தியாசமான கதைகளுடன் மட்டுமே வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை