பீகாரை உலுக்கும் மூளைக்காய்ச்சல்: பலி எண்ணிக்கை 80-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
பீகாரை உலுக்கும் மூளைக்காய்ச்சல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு

முசாஃபர்பூர்: பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் \'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்\' மற்றும் \'ஜப்பான் என்சபிலிட்டிஸ்\' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. தற்போது இந்த மூளைகாய்ச்சலால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயானது மூளையின் செயல்பாட்டை தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் ஒருவித காய்ச்சல் ஆகும். பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளது. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என்செபாலிடிஸ் அறிகுறிகளுடன் 117 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகிறது. முஷாபர் பூர் கிருஷ்ணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. கெஜ்ரிவால் மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து இதுவரை மொத்தம் 69 குழந்தைகள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை