பதறிய தமிழக அமைச்சர்கள்

தினமலர்  தினமலர்
பதறிய தமிழக அமைச்சர்கள்

புதுடில்லி: சமீபத்தில், டில்லிக்கு வந்த தமிழக அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி இருவரும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்தனர்.

தமிழக அரசியல் நிலை ற்றும் கூட்டணி தோல்வி குறித்து, அவர்கள் பேசியுள்ளனர். அப்போது, அமித் ஷா ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி, மாறி பேசியிருக்கிறார்.


புரியாத ஹிந்தி


தங்கமணிக்கு ஓரளவு ஹிந்தி தெரியும் என்றாலும், அமித் ஷாவின் குஜராத்தி கலந்த ஹிந்தி, அவருக்கு சுத்தமாக புரியவில்லை. இரண்டு அமைச்சர்களும், தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி, அமித் ஷா பேசியதை ஓரளவு புரிந்து கொண்டனர். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தது குறித்து, அமைச்சர்களிடம் கோபப்பட்டிருக்கிறார் அமித் ஷா. தேர்தலில், அ.தி.மு.க., சரியாக வேலை செய்யவில்லை எனவும் அவர்களிடம் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதிரடி நடவடிக்கை


இதைக்கேட்டு தங்கமணி, வேலுமணி இரு வரும் பதறி போயினர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக அரசியல் களத்தில், அதிரடி நடவடிக்கைகள் எடுக்க, பிரதமர் மோடியும், கட்சி தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்துவதைப் போலவே, தமிழக கட்சிகளை ஒரு வழியாக்க, பா.ஜ., தயாராகி வருகிறதாம்

மூலக்கதை