பின்ச் சதம்: ஆஸி., ரன் குவிப்பு

தினமலர்  தினமலர்
பின்ச் சதம்: ஆஸி., ரன் குவிப்பு

லண்டன்: இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் கேப்டன் பின்ச் சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 334 ரன்கள் குவித்தது.


இங்கிலாந்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் நடக்கும் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 சேர்த்த போது வார்னர் (26) அவுட்டானார். அபாரமாக ஆடிய பின்ச், ஒருநாள் அரங்கில் தனது 14வது சதமடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது பின்ச் (153) அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் (73) நம்பிக்கை தந்தார். ஷான் மார்ஷ் (3), அலெக்ஸ் கேரி (4), கம்மின்ஸ் (0) ஏமாற்றினர்.


ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (46), ஸ்டார்க் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் இசுரு உதானா, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை