விராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்?

தினமலர்  தினமலர்
விராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்?

மான்ஸ்செஸ்டர்: ஐ.சி.சி.,விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட இந்தியாவின் தூர் தர்ஷன் சிக்கில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் விரான் கோஹ்லியின் பேட்டிஒன்று இந்தியாவின் தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
போட்டியின் துவங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ அணியின் கேப்டனிடம் பேட்டி எடுப்பது கூடாது என்பது ஐ.சி.சியின் விதிகளுள் ஒன்றாகும். இதனை மீறி விராட் கோஹ்லயின் பேட்டியை இந்தியாவின் தூர்தர்ஷன் டிவி ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைனையடுத்து தூர்தர்ஷன்

(தூர்தர்ஷன் நிறுவனத்தை சேர்ந்த நிருபர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு அடுத்த போட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது) நிறுவனம் அடுத்து வரும் போட்டிகளை நேரடியாக ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாத சூழலில் இந்தியாவின் அரசுக்கு சொந்தமான டி.வி சிக்கலில் சிக்கி உள்ளது . இத்தகைய சிக்கலில் சிக்குவது என்பது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாக்., பயிற்சியாளருக்கும் ஐ.சி.சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இது குறித்து விளக்கம் அளித்துள்ள தூர் தர்ஷன் நிறுவனம் இது செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையே தவிர ஒளிபரப்பிற்காக விதிக்கப்பட்ட தடை அல்ல .எனவே தொடர்ந்து வரும் போட்டிகளை ஒளிபரப்புவதில் எவ்வித தடையும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை