'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கடலுார்: தினமலர் நாளிதழ் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான உங்களால் முடியும் நிகழ்ச்சி கடலுாரில் நேற்று நடந்தது.
தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மேல்படிப்பை தேர்வு செய்வதற்கான 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி கடலுார் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி, ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கினர். நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, கோவை தொழில்நுட்பக் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில்வேல், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சேர்மேன் ஸ்ரீராம், ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி துறை பேராசிரியர் யுவராஜ், முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு டி.என்.இ.ஏ., சார்பில் நடத்தப்படும் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், விதிமுறைகள், கல்லுாரிகள் தேர்வு, தற்போதைய சூழ்நிலையில் தேர்வு செய்யப்பட வேண்டிய பாடப்பிரிவுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.
மாணவர்கள், பெற்றோர்களின் சந்தேங்களுக்கு கல்வி ஆலோசகர்கள் விளக்கம் அளித்தனர். கடலுார், பண்ருட்டி, சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மூலக்கதை