கச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
கச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு

­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, உருக்கு துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ள­தா­வது:

மே மாதத்­தில், கச்சா உருக்கு உற்­பத்தி, 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 9.24 மில்­லி­யன் டன் ஆக உள்­ளது. இதுவே, கடந்த ஆண்டு, மே மாதத்­தில், 8.78 மில்­லி­யன் டன் ஆக இருந்­தது. நடப்பு நிதி­யாண்­டின், முதல் இரு மாதங்­க­ளான, ஏப்­ரல் – மே மாதத்­தில், 18.02 மில்­லி­யன் டன் உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளது.



இதுவே, கடந்த ஆண்­டில், இதே கால­கட்­டத்­தில், 17.43 மில்­லி­யன் டன், கச்சா உருக்கு உற்­பத்தி செய்­யப்­பட்­டி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ‘பினிஷ்டு ஸ்டீல்’ எனும், வர்த்­த­கத்­துக்கு தயா­ராக உள்ள உருக்கு உற்­பத்தி, ஏப்­ரல் – மே மாதங்­களில், 21.37 மில்­லி­யன் டன். இதுவே, கடந்த ஆண்­டில், இதே கால­கட்­டத்­தில், 21.16 மில்­லி­யன் டன் ஆக இருந்­தது. இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை