வரி சலுகைகளை நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு கோரிக்கை

தினமலர்  தினமலர்
வரி சலுகைகளை நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு கோரிக்கை

புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.



தகவல் தொழில்நுட்பத் துறையின், தேசிய அமைப்பான, நாஸ்காம்.இது குறித்து, நாஸ்காம் அமைப்பின், மூத்த இயக்குனர், அஷிஷ் அகர்வால் கூறியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை, 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகும் தொடர வேண்டும்.


தகவல் தொழில்நுட்பத் துறையானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.6 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது. நேரிடையாக, 41 லட்சம், திறன் மிகுந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பை இத்துறை வழங்குகிறது. மேலும், ஆண்டுதோறும், 9.06 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அன்னியச் செலாவணியையும் ஈட்டி வருகிறது.இந்நிலையில், சலுகைகளை மேலும், 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில், முதலீடுகள் செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை