திருநங்கையிடம் சில்மிஷம் பேராசிரியர் சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருநங்கையிடம் சில்மிஷம் பேராசிரியர் சஸ்பெண்ட்

தஞ்சை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வியியல் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. அப்போது கண்காணிப்பு அலுவலராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் உதவி பேராசிரியர் முத்தையன் நியமிக்கப்பட்டார்.

இந்த தேர்வில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் ரூ5,000 கொடுத்தால் காப்பி அடித்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகிகளிடம் முத்தையன் பேரம் பேசி உள்ளார்.

இதற்கு மாணவர்களும், கல்லூரி நிர்வாகமும் ஒத்துக்கொள்ளவில்லை.

இதையடுத்து சோதனை என்ற பெயரில் மாணவிகளிடம் முத்தையன் தவறாக நடந்து கொண்டுள்ளார், அங்கு தேர்வெழுதிய தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த திருநங்கை ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் செய்யப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரிக்க ஒரு குழுவை துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அமைத்தார். அந்த குழு மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தியது.

அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் முத்தையனை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

.

மூலக்கதை