அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் பஸ் ஸ்டாப் அமைத்து தராவிட்டால் போராட்டம்; பயணிகள் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் பஸ் ஸ்டாப் அமைத்து தராவிட்டால் போராட்டம்; பயணிகள் எச்சரிக்கை

ஆவடி : அம்பத்தூர், ஆவடி பகுதியில் பஸ் ஸ்டாப் அமைத்துதராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பயணிகள் எச்சரித்துள்ளனர். சென்னை அம்பத்தூர், பாடி, அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயில், ஆவடி, கோவில்பதாகை, அண்ணனூர், பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர் மற்றும் பாக்கம் பகுதிகளில் பஸ் ஸ்டாப்  உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தியபோது மேற்கண்ட பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்புகள் அகற்றப்பட்டன. இதன்பிறகு, ஒருசில இடங்களில் மட்டும் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டன. இங்குள்ள பல்வேறு முக்கிய பிரதான சாலைகளில் இதுவரை பஸ் ஸ்டாப் அமைக்கப்படவில்லை.

ஒரு சில இடங்களில் உள்ள பஸ் ஸ்டாப்பின் கூரைகள் உடைந்துவிட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பினரும் பஸ்  ஸ்டாப் இல்லாததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர, மினி பஸ் செல்லும் உட்புற சாலைகளில் பஸ் ஸ்டாப் அறவே இல்லை.

இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாப் அமைத்து தரும்படி எம்பி, எம்எல்ஏ மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மேற்கண்ட பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பஸ் ஸ்டாப் அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.

.

மூலக்கதை