டாக்டர்கள் 119 பேர் ராஜினாமா? மேற்கு வங்க போராட்டம் தீவிரம்

தினமலர்  தினமலர்
டாக்டர்கள் 119 பேர் ராஜினாமா? மேற்கு வங்க போராட்டம் தீவிரம்

கோல்கட்டா:மேற்கு வங்க அரசுக்கு எதிரான மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 'ஆர்ஜி கர்'மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் உட்பட, 119 பேர், பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கோல்கட்டா அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவரை, நோயாளியின் உறவினர் தாக்கினார்.இதையடுத்து பாதுகாப்பு கோரி, மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பா.ஜ.,வின் துாண்டுதலின் பேரில் தான், இப்போராட்டம் நடத்தப்படுவதாக,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றம் சாட்டினார். இதனால் கொந்தளித்த மருத்துவர்கள், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.கோல் கட்டாவின் 'ஆர்ஜி கர்' மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் உட்பட, மொத்தம், 119 பேர், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.


மேலும் தங்களை விமர்சித்த முதல்வர் மம்தா பானர்ஜி, மன்னிப்பு கேட்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேற்கு வங்க கவர்னர் கேசரி நாத் திரிபாதி, நிருபர்களிடம் கூறுகையில், ''டாக்டர்கள் போராட்டம் குறித்து,முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேச, தொலைபேசியில் தொடர்புகொண்டேன். னால், இதுவரை அவர் என்னிடம் பேசவில்லை,''என்றார்.


மூலக்கதை