மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல: மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்

தினமலர்  தினமலர்
மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல: மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்

புதுடில்லி : ''டில்லி மெட்ரோவில் பெண்கள், இலவச பயணம் செய்யும் திட்டம் சரியானது அல்ல இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது என மெட்ரோ மேன் எனப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகர், டில்லியில் இயக்கப்படும், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில், பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.

இந்த பயண திட்டம் குறித்து இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியும் , பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துளார். . இவர் இந்தியாவின் மெட்ரோ மேன் என்றழைக்கப்படுகிறார்.



நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் டில்லி முதல்வர் அறிவித்துள்ள இலவச மெட்ரோ பயண திட்டம் சரியானது அல்ல. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மெட்ரோ ரயில் திவாலாகிவிடும். இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

மூலக்கதை