மொத்த விலை பணவீக்கம் 2.45 சதவீதமாக குறைவு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் 2.45 சதவீதமாக குறைவு

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், 22 மாதங்களில் இல்லாத வகையில், 2.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.


உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை வீழ்ச்சி காரணமாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், மொத்த விலை பணவீக்க விகிதம், 3.07 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, மே மாதத்தில், இதுவே, 4.78 சதவீதமாக அதிகரித்து இருந்தது.



நடப்பாண்டு மே மாதத்தில், உணவுப் பொருட்கள் பிரிவில், பணவீக்கம், 6.99 சதவீதமாக உள்ளது. இதுவே, ஏப்ரல் மாதத்தில், 7.37 சதவீதமாக அதிகரித்து இருந்தது.காய்கறிகள் பிரிவில், பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில், 40.65 சதவீதமாக இருந்தது, மே மாதத்தில், 33.15 சதவீதமாகக் குறைந்துள்ளது.


மொத்த விலை பணவீக்கம், இதற்கு முன், 2017 ஜூலை மாதத்தில், 1.88 சதவீதமாக இருந்தது. 22 மாதங்களுக்குப் பின், கடந்த மே மாதத்தில் தான் பணவீக்கம் குறைவாக இருந்துள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, ஏழு மாதங்களில் இல்லாத வகையில், 3.05 சதவீதமாக அதிகரித்துஇருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை