புழல் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு!

தினமலர்  தினமலர்
புழல் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு!

புழல்:தமிழக முதல்வர், சிறைத் துறையின் மூலம் திறந்து வைத்த, புதிய பெட்ரோல், 'பங்க்'கில், ஆயுள் தண்டனை கைதிகளுக்கு, மறுவாழ்வாக வேலை வாய்ப்பு கிடைத்தது.
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி, புதிய பெட்ரோல் பங்க் அமைந்துஉள்ளது. அதை, நேற்று காலை, 10:30 மணிக்கு, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., காணொலி மூலம், திறந்து வைத்தார்.ரூ.2 கோடிஏற்கனவே, கோவை, வேலுார், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகியவற்றில், சிறைத்துறை மூலம் பெட்ரோல், 'பங்க்'கள் திறக்கப்பட்டுள்ளன.புழலில், 1.46 ஏக்கர் பரப்பளவில், 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள, புதிய பெட்ரோல், 'பங்க்'கில், ஆயுள் தண்டனை கைதிகள், 25 பேருக்கு, வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக, அவர்களுக்கு, முன்னதாக பயிற்சி அளிக்கப்பட்டது. சுகாதாரமான குடிநீர்பணியின் போது, அவர்களை, 10 முதல்நிலை தலைமைக் காவலர்கள், நான்கு காவலர்கள் கண்காணிப்பர்.புதிய பெட்ரோல், 'பங்க்' வளாகத்தில், பொதுமக்களுக்கு வசதியாக, ஏ.டி.எம்., மையம், சுகாதாரமான குடிநீர் மற்றும் சிறை கைதிகள் தயாரிப்பில் உருவான எண்ணெய், பிஸ்கட், கேக் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் சிறை சந்தை அமைந்துள்ளன.திறப்பு விழாவில், புழல் சிறை அதிகாரிகள், செந்தில்குமார், செந்தாமரை கண்ணன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிறையில் எங்கள் நன்னடத்தையை கருதி, பெட்ரோல், 'பங்க்'கில், வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு மறுவாழ்வு. நாங்கள் விடுதலையாகி வெளியில் சென்றாலும், குற்றச்செயல்களை மறந்து, எங்கள் குடும்பத்தின் நலனுக்காக, வேலை செய்து வாழ்வோம். மேலும், இப்போது கிடைத்துள்ள, வேலை வாய்ப்பின் மூலம், பொதுமக்களிடம் சகஜமாக பழகும் மனநிலை, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக,சிறைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-சிறை கைதிகள், புழல்.
இந்த பெட்ரோல் பங்க், பொதுமக்களுக்கான அனைத்து வசதிகளுடன், கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் உள்ளது. இங்கு, நுகர்வோருக்கு, கலப்படம் இல்லாத எரிபொருள் சரியான அளவில் கிடைக்கும். ஆயுள் தண்டனை கைதிகளில், பத்தாண்டு நிறைவு செய்த அல்லது நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களின், நன்னடத்தை மூலம், அவர்கள், பெட்ரோல், 'பங்க்' வேலைக்காக, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிக்காக, அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும். அவர்களின் பாதுகாப்பு கருதி, 14 காவலர்கள், அவர்களை கண்காணிப்பர். இங்கு, பெட்ரோல் நிரப்ப வருவோர், மறுவாழ்வுக்காக வேலை செய்யும், அவர்களை, கைதியாக பார்க்காமல், சக மனிதனாக பார்த்து, அவர்களுக்கு வாழ்க்கைக்கான, நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
-சிறை அதிகாரிகள், புழல்.

மூலக்கதை