ஸ்டாலினுடன் விமான பயணம்; ரத்து செய்த முதல்வர் பழனிசாமி

தினமலர்  தினமலர்
ஸ்டாலினுடன் விமான பயணம்; ரத்து செய்த முதல்வர் பழனிசாமி

திருச்சி: தி.மு.க., தலைவர், ஸ்டாலினுடன், ஒரே விமானத்தில் பயணிப்பதை, முதல்வர் பழனிசாமி., ரத்து செய்தார்.


திருச்சி, அ.தி.மு.க., புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் ராஜ்யசபா, எம்.பி., ரத்தினவேல் மகனின் திருமண விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி நேற்று(ஜூன் 13) திருச்சி வந்தார். மீண்டும், இரவு, 8:10 மணிக்கு, 'இண்டிகோ' விமானத்தில், சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார்; இதற்கான ஏற்பாடுகளை, அரசு அதிகாரிகளும் செய்திருந்தனர்.


இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அதே விமானத்தில், சென்னை செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தி.மு.க., தரப்பில் பேசி, ஸ்டாலினை வேறு விமானத்தில் செல்லுமாறு கேட்கப்பட்டதாம். அவர்கள் மறுத்து விட்டதால், ஸ்டாலினை சந்திக்க, முதல்வர் பழனிசாமி விரும்பாமல், நாமக்கல் வழியாக, சேலத்துக்கு காரில் சென்றார். சேலத்தில் இருந்து, இரவு, 11:00 மணி விமானத்தில், சென்னை புறப்பட்டு சென்றார்.

மூலக்கதை