மேற்கு வங்கத்தில் 4வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்..: அனைவரும் பணிக்கு திரும்ப மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் 4வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்..: அனைவரும் பணிக்கு திரும்ப மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 4 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தை கைவிட்டு, மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சி மருத்தவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 4 மணி நேர கெடுநான்கு நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மருத்துவர்கள் அல்ல எனவும் வெளியிலிருந்து சிலர் மாநிலத்தில் சிக்கலை ஏற்படுத்த முற்படுகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசு ஒருபோதும் எந்த வகையிலும் அனுமதிக்காது. இது சிபிஎம் மற்றும் பாஜகவினரின் சதி. நீங்கள் மக்களுக்கு சேவையை செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யாமல் ஒருவர் மருத்துவராக இருக்க முடியாது. அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்தார். தொடர் போராட்டம்இந்நிலையில், 4 மணி நேரத்தில் கைவிடப்பட வேண்டும் என முதல்வர் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறும், தலையில் பேண்டேஜ் அணிந்தவாறும் பணியில் ஈடுபட்டனர். மம்தா கோரிக்கைஇந்நிலையில் கெடு முடிந்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாததால் அவர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவர்கள்/மருத்துவகல்லூரி பேராசியர்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள். அனைத்து நோயாளிகளையும் தயவு செய்து கவனித்துக்கொள்ளுங்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவமனைகளுக்கு ஏழை மக்கள் வருகிறார்கள். நீங்கள் மருத்துவமனைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நான் மிகவும் கடமைப்படுவேன். மருத்துவமனைகள் அனைத்தும் சுமூகமாக இயங்க வேண்டும், தங்களின் முழு பங்களிப்பிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை