சட்டவிரோத சுரங்க ஒதுக்கீடு உபி. முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை

தினகரன்  தினகரன்
சட்டவிரோத சுரங்க ஒதுக்கீடு உபி. முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆட்சி நடந்தபோது சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவரது பொறுப்பில் கடந்த 2012-16ம் ஆண்டுகளில் ஹமிர்பூர்  மாவட்டத்தில் சுரங்க ஒதுக்கீடு செய்வதில் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மேலும் பெண் ஒருவருக்கு சுரங்க ஒதுக்கீடு தருவதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்த வழக்கில் இவர் சிறையில் இருக்கிறார்.டெல்லி, என்சிஆர், உபியில் ஹமிர்பூரில் 11 இடங்கள், அமேதியில் உள்ள இவரது 3 வீடுகள் உள்பட 22 இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவரது காலத்தில் சுரங்க ஒப்பந்த விதிகளையும் நடைமுறைகளையும் மீறி  சட்ட விரோதமாக சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை