இன்று டான்டனில் மோதல் ஆஸ்திரேலியா-பாகிஸ்தானை மிரட்டுகிறது மழை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று டான்டனில் மோதல் ஆஸ்திரேலியாபாகிஸ்தானை மிரட்டுகிறது மழை

டான்டன்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று டான்டனில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியிலும் மழை குறுக்கிடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் இரு அணிகளின் வீரர்களும் கவலையில் உள்ளனர்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்ற ஆஸி.

அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியும் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்த அந்த அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான போட்டி, மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

இதனால் இன்றைய போட்டி பாக்.

அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. வலுவான ஆஸி.

அணியை வீழ்த்துவதன் மூலம் பாக். அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணிக்கும் இதே நிலைதான். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆஸி.

வீரர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ளன.

அவற்றில் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆஸி.

அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் ஸ்டானிஸ், காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் அவர் ஆடுவாரா என்பது குறித்து ஆஸி.

கிரிக்கெட் வாரியம் தெளிவாக இதுவரை ஏதும் அறிவிக்கவில்லை. எனினும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் மார்க், ஆஸி. யில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து வருகிறார்.



ஸ்டானிஸ் குணமாகவில்லை என்றால், இத்தொடரில் அவருக்கு பதிலான மிட்சல் மார்க் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. வார்னர், பின்ச், ஸ்மித், க்வாஜா, மேக்ஸ்வெல் என ஆஸி.

அணியின் வலுவான பேட்ஸ்மென்கள், பாக். பவுலர்களுக்கு கடும் நெருக்கடி தர காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாக். அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அனைவருமே ஜொலித்தனர்.

ஓபனர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பகர் ஜமன் நல்ல துவக்கத்தை அளித்தனர். அடுத்து பாபர் அசமும், முகமது ஹபீசும் இங்கிலாந்து பவுலர்களை விரட்டி விரட்டி அடித்தனர்.

அணியின் கேப்டன் சர்பராசும் அரை சதம் அடித்தார். இதனால் அப்போட்டியில் பாக்.

அணி 348 ரன்களை குவித்தது. ஆனால் ஒரு வாரத்திற்கு டான்டனில் தொடர்ந்து மழை என்று வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன.

மழை குறுக்கிடாமல் இருந்தால், சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

.

மூலக்கதை