ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி பாலைவனமாகும்: திருமாவளவன் எம்பி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி பாலைவனமாகும்: திருமாவளவன் எம்பி பேச்சு

சிதம்பரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும் என்று திருமாவளவன் எம்பி பேசினார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம். பி பேசியதாவது: மெகா வெற்றி கூட்டணியாக அமைத்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நமது கொள்கை பகைவர்கள் எப்படியாவது திருமாவளவனை தோற்கடித்தால் இனி யாரும் அவரை கூட்டணியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள் என எண்ணினார்கள்.

திருமாவளவன் இடம் பெற்ற திமுக கூட்டணி தமிழகத்தில் 37 இடங்களில் வெற்றிப்பெற்றது. திருமாவளவன் வெற்றிப்பெற்றால் சிதம்பரம் தொகுதியின் பாதுகாவலராக இருப்பார் என தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறினார்.



அதேபோல் சிதம்பரம் தொகுதியின் பாதுகாவலராக விளங்குவேன். சமூக வலைதளங்களில் எவ்வித அவதூறு தகவல்களையும் யாரும் பரப்பக்கூடாது.

யாரோ செய்யும் தவறு திருமாவளவன் மீது பழி விழுகின்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னையால் தமிழகம் தள்ளாடி கொண்டிருக்கிறது. சிதம்பரம் தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

சாதி, மதங்களிலிருந்து நாட்டை காப்பாற்றவேண்டும். இவ்வாறு பேசினார்.


.

மூலக்கதை