கோவையில் 7 பேரின் வீடுகளில் என்ஐஏ.அதிகாரிகள் சோதனை: தீவிரவாதிகளுடன் தொடர்பா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவையில் 7 பேரின் வீடுகளில் என்ஐஏ.அதிகாரிகள் சோதனை: தீவிரவாதிகளுடன் தொடர்பா?

கோவை: கோவையில் 7 பேரின் வீடுகளில் என். ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தன. இதில் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையதாக கருதப்படும் தீவிரவாத அமைப்புகளுடன் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணங்களில் என். ஐ. ஏ.

(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக கோவையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் என். ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



அப்போது அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பரிமாறியது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் நடைபெற இருப்பது விசாரணையில் என். ஐ. ஏ அதிகாரிகளுக்கு தெரிந்தது.
இதுதொடர்பாக இந்தியா ஏற்கனவே இலங்கையை எச்சரிக்கை செய்திருந்தது.

இதன் பின்னர் நடைபெற்ற குண்டு வெடிப்பில்தான் இலங்கையில் பலர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து என். ஐ. ஏ.

அதிகாரிகள் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் சிலரது வீடுகளில் சோதனை நடத்தி வந்தனர். கொச்சியில் முகாமிட்டு பலருடைய வீடுகளில் சோதனை நடத்தினர்.

கடந்த மாதம் கோவையில் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இன்று காலை கொச்சியில் இருந்து வந்திருந்த என். ஐ. ஏ.

அதிகாரிகளும், கோவையை சேர்ந்த அதிகாரிகளும் கோவையில் 7 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் அன்பு நகரில் உள்ள அசாருதீன், போத்தனூர் சதாம், அக்பர், அக்ரம் தில்லா, குனியமுத்தூர் அபுபக்கர் சலீம், அல் அமீன் காலனியை சேர்ந்த இதயத்துல்லா, சாகீம் ஷா உள்ளிட்ட மொத்தம் 7 பேரின் வீடுகளில் இன்று காலை 5. 30 மணி முதல் என். ஐ. ஏ.

அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஒவ்வொரு இடங்களிலும் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அசாருதீன், சதாம், அக்பர், அக்ரம் தில்லா, அபுபக்கர் சலீம், இதயத்துல்லா, சாகீம் ஷா ஆகியோரின் வீடுகளில் செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்டவற்றை ஆராய்ந்தனர். அவர்கள் சமூக வலைதளத்தில் ஐ. எஸ்.

ஐ. எஸ் தீவிரவாத கும்பலுடன் தகவல்களை பரிமாறியுள்ளனரா? என்று சோதனை செய்தனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணையும் நடந்தது.

சோதனையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

பென்டிரைவ், டைரி பறிமுதல்
அசாருதீன், சதாம், அக்பர், அக்ரம் தில்லா, அபுபக்கர் சலீம், இதயத்துல்லா, சாகீம் ஷா ஆகியோரின் வீடுகளில் இருந்து பென் டிரைவ், டைரி சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் எந்த மாதிரியான தகவல்களை அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர் என்று விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை