நிரவ்வுக்கு ஜாமின் கிடைக்குமா?இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
நிரவ்வுக்கு ஜாமின் கிடைக்குமா?இன்று விசாரணை

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்று முறை ஜாமின் வழங்க,மறுத்துள்ளது. லண்டன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,600 கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி, நிரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தன. இந்த நிலையில், அவர், லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும்படி, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதையடுத்து, நிரவ் மோடி மீது, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜாமின் கோரி, அவர் மூன்று முறை மனு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி ஆனதால் நிரவ் மோடி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை முடிவை நீதிபதி இங்கிரிட் சிம்லர் இன்று வெளியிடுகிறார்.


மூலக்கதை