வணிக வரி மறு சீரமைப்பு வசதிகள் இல்லை என புகார்

தினமலர்  தினமலர்
வணிக வரி மறு சீரமைப்பு வசதிகள் இல்லை என புகார்

மறு சீர­மைப்பு செய்த வணிக வரி துறை­யில், புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட பல்­வேறு பிரி­வு­க­ளுக்கு, போதிய வசதி ஏற்­ப­டுத்தி தர­வில்லை என, அதி­கா­ரி­கள் புகார் தெரி­வித்­துள்­ள­னர்.கடந்த, 2017ம் ஆண்டு ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்­றும் சேவை வரி சட்­டம் அறி­மு­க­மா­னது.
இத்­சட்­டத்­தின் கீழ், வரி நிர்­வா­கத்தை சிறப்­பாக செயல்­ப­டுத்த, தமி­ழக வணிக வரி துறை, மறு சீர­மைப்பு செய்­யப்­பட்­டது.இதில், வணிக வரி துறை­யில் செயல்­பட்டு வரும், செய­லாக்­கப் பிரிவு, ‘நுண்­ண­றி­வுப் பிரிவு’ என, பெயர் மாற்­றம் செய்­யப்­பட்டு, ஜூன் முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளது.இந்­நி­லை­யில், புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட பல்­வேறு பிரி­வு­களில், போதிய வசதி ஏற்­ப­டுத்தி தர­வில்லை என, புகார் எழுந்­துள்­ளது.
இது குறித்து, வணிக வரி துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:மறு­சீ­ர­மைப்பு செய்து, பல்­வேறு புதிய பிரி­வு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இவை­ய­னைத்­தும் ஜூன் முதல் செயல்­பட துவங்கி விட்­டன.ஆனால், இதற்­கான அலு­வ­ல­கம், தேவை­யான வச­தி­கள் ஏதும் செய்து தரப்­ப­ட­வில்லை. மறு­சீ­ர­மைப்பு நல்ல திட்­டம் தான். ஆனால், அதற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்­திய பின், நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்க வேண்­டும். எனவே, முறை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்த, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.– நமது நிரு­பர் –

மூலக்கதை