ஒப்பந்ததாரருக்கு நிலுவை ரூ.3 கோடி! பாதாள சாக்கடை நிறுத்தம்

தினமலர்  தினமலர்
ஒப்பந்ததாரருக்கு நிலுவை ரூ.3 கோடி! பாதாள சாக்கடை நிறுத்தம்

கோவை:ஒப்பந்ததாரருக்கு, ரூ.3 கோடி கொடுக்காமல், கோவை மாநகராட்சி நிலுவை வைத்ததால், திருச்சி ரோட்டில், 5 கி.மீ., துாரத்துக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. விடுபட்ட பகுதியிலும், மற்ற பகுதியிலும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
ஒண்டிப்புதுாரில் கட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, திருச்சி ரோட்டில், 5 கி.மீ., துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டும்.இதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி கொடுக்காததால், இழுபறி ஏற்பட்டது. குழி தோண்டி, குழாய் பதித்ததும் மீண்டும் ரோடு போட வேண்டும் என்பதால், ரூ.5 கோடி செலுத்த, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிபந்தனை விதித்தது.
அத்தருணத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடை பிரச்னை எழுந்தது. அப்போது, நகரப்பகுதியை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வரும் என, அரசு உத்தரவிட்டது. உடனே, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பணம் செலுத்துவதை, மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்தது.தமிழக அரசின் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்படாததால், பணம் செலுத்தி, அனுமதி பெறப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம், பல கோடி ரூபாய் முதலீடு செய்து, மெகா சைஸ் குழாய்களை தருவித்து, திருச்சி ரோட்டில் இறக்கியது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அருகே வேலையையும் துவக்கியது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம், அந்நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 கோடியை நிலுவை வைத்து விட்டது. அதனால், தொடர்ந்து பணியாற்ற முடியாத சிக்கல் ஏற்பட்டதால், பாதாள சாக்கடை குழாய்களை பதிக்காமல், நிறுத்தி வைத்து விட்டது.அதனால், குழாய்கள் காட்சிப் பொருளாக கிடக்கின்றன.
இதேபோல், கோவை மாநகராட்சியின் பல்வேறு பணிகள் பாதியில் நிற்கின்றன. மாநகராட்சி கமிஷனரின் நேரடி கவனத்துக்கு, இத்தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம், அந்நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 கோடியை நிலுவை வைத்து விட்டது. அதனால், தொடர்ந்து பணியாற்ற முடியாத சிக்கல் ஏற்பட்டதால், பாதாள சாக்கடை குழாய்களை பதிக்காமல், நிறுத்தி வைத்து விட்டது. அதனால், குழாய்கள் காட்சிப் பொருளாக கிடக்கின்றன.

மூலக்கதை