ஜி.டி.பி: கோல்டுமேன் கணிப்பு

தினமலர்  தினமலர்
ஜி.டி.பி: கோல்டுமேன் கணிப்பு

புதுடில்லி:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என, அமெரிக்க தரகு நிறுவனமான, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கூறியுள்ளது.



அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவின், ஜி.டி.பி., வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.2 சதவீதமாக இருக்கும்.இதற்கு, உலகளவில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, முக்கியமான காரணமாகும். உள்நாட்டை பொறுத்தவரை, நிலையான அரசியல் சூழல், உள்கட்டுமானங்களில் இருந்து வரும் தடைகள் நீக்கப்படுவது ஆகியவை காரணமாக அமையும்.



இருப்பினும், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் நிகழ்ந்து, விலை அதிகரித்தால், இந்த கணிப்பு மாறும் நிலை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின், ஜி.டி.பி., வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை