இலவச கல்வித்திட்டம் பற்றிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பு தந்த பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இலவச கல்வித்திட்டம் தொடர்பாக அளித்த, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பெரம்பலூர் தொகுதி எம்பி. பாரிவேந்தர் வெளியிட்டு உள்ளார்.

பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று இருப்பவர் பாரிவேந்தர் ஆவார். இவர் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவரும் ஆவார்.

பொதுவாக தேர்தலின் போது, வாக்கு சேகரிப்பதற்காகப் பல உறுதிமொழிகளை வேட்பாளர்கள் அளிப்பது உண்டு. அது போலவே பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளர் பாரிமுத்துவும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதில் இலவச கல்வித்திட்டம் தொடர்பான வாக்குறுதியும் இடம்பெற்று இருந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் படி இலவச கல்வி திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார். 
தமது எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம் என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார். 

பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தரின் இலவச கல்வித்திட்டம் நிறைவேற்றும்  அறிவிப்பை வலைத்தமிழ் பாராட்டி வரவேற்கின்றது.

மூலக்கதை