முதல் வெற்றி யாருக்கு? இலங்கை-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல் வெற்றி யாருக்கு? இலங்கைஆப்கானிஸ்தான் இன்று மோதல்

வேல்ஸ்: ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே நடப்பு தொடரில் இதுவரை தலா ஒரு போட்டியில் ஆடி, அதில் தோல்வியடைந்திருக்கின்றன.

எனவே இன்று முதலாவது வெற்றியை குறி வைத்து இரு அணிகளும் களமிறங்க உள்ளன. உலககோப்பையில் இதுவரை இரு அணிகளும் ஒரே ஒருமுறை மோதியுள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்தின் டுனெடின் நகரில் நடந்த அப்போட்டியில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள், இலங்கையை மிரட்டி விட்டனர் என்றே கூற வேண்டும்.



233 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள், இலங்கை ஓபனர்கள் திரிமானோவையும், திலகரத்னேவையும் டக்-அவுட் செய்தனர். தொடர்ந்து சங்ககாரா, கருணரத்னே சொற்ப ரன்களில் வெளியேற 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் என இலங்கை திணறியது.

பின்னர் ஜெயவர்த்தனே சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நயிப் தலைமையிலான ஆப்கன் அணியின் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஓரளவு மதிப்பான ஸ்கோரை (207 ரன்கள்) எட்டினர்.

208 ரன்கள் என்ற இலக்கை ஆஸி. அணியால் 35வது ஓவரில்தான் எட்ட முடிந்தது.

கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியோ, தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 30 ஓவர்களிலேயே 136 ரன்களுக்கு சுருண்டு விட்டது.

அந்த இலக்கை நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 16. 1 ஓவர்களில் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில எளிதாக வென்று விட்டது.
இலங்கை அணிக்கு நெருக்கடி தரவல்ல பவுலர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ளனர்.

அந்த அணியின் பேட்ஸ்மென்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

.

மூலக்கதை