பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் நடால், வாவ்ரிங்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் நடால், வாவ்ரிங்கா

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு முன்னணி வீரர்கள் ரஃபேல் நடால்,  ரோஜர் பெடரர் மற்றும் வாவ்ரிங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடந்த 4வது சுற்று முதல் போட்டில் ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர் ரோஜர் பெடரரை, அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயர்  எதிர்த்து மோதினார்.

இதில் பெடரர் 6-2, 6-3, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.   மற்றொரு போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலை எதிர்த்து, அர்ஜென்டினாவின் ஜுவான் இக்னேசியோ லோண்ட்ரோவை மோதினார்.   இதில் 6-2-, 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று, நடால் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

கிரீசை சேர்ந்த ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசும், ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவுக்கும் இடையே நடந்த 4வது சுற்று போட்டியில்  அனல் பறந்தது.

5 செட்கள் வரை நீடித்த இப்போட்டியில் இருவரும் கடுமையாக போராடினர். முதல் செட்டை டை பிரேக்கரில் வாவ் ரிங்கா  கைப்பற்றினார், இரண்டாவது செட் சிட்சிபாஸ் வசமானது.

3வது செட்டை வாவ்ரிங்கா கைப்பற்ற, பதிலுக்கு 4வது செட்டை சிட்சிபாஸ் பறித்துக்  கொண்டார். 5வது செட்டில் அவரவர் கேமை அவரவர் தக்க வைத்துக் கொள்ள, போட்டி பரபரப்பான நிலையை எட்டியது.

இறுதியில் அந்த செட்டை  வாவ்ரிங்கா கைப்பற்றி, சிட்சிபாசை வெளியேற்றினார்.

7-6, 5-7, 6-4, 3-6, 8-6 என 5 செட்களில போராடி வென்று, வாவ்ரிங்கா காலிறுதிக்குள்  நுழைந்துள்ளார்.   நாளை நடைபெற உள்ள முதலாவது காலிறுதியில் ஸ்விட்சர்லாந்து வீரர்கள் பெடரரும், வாவ்ரிங்காவும் எதிர்த்து மோதவுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை