புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்வை கண்டித்து பாஜகவினர் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்வை கண்டித்து பாஜகவினர் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பாஜகவினர் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தீப்பந்தம் ஏந்தி 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மிக்சி உள்ளிட்ட குளிர்சாதன பொருட்களை உடைத்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 4.59% மின்கட்டண உயர்வு ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மூலக்கதை