சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு பரிமாறிய விவகாரம்: 1.54 லட்சம் இழப்பீடு தர ஏர் ஏசியா-வுக்கு கோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு பரிமாறிய விவகாரம்: 1.54 லட்சம் இழப்பீடு தர ஏர் ஏசியாவுக்கு கோர்ட் உத்தரவு

ஹரியானா: விமானத்தில் சைவப் பயணிக்கு அசைவ உணவைக் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில்1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஏர் ஏசியா நிறுவனத்துக்கு பாஞ்குலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 அக்டோபரில் 61 வயது விஜய் திரிஹான் ஏர் ஏசியா விமானத்தில் தம்முடைய குடும்பத்துடன் கோலாலாம்பூர் சென்றிருந்தார். சில நாட்களுக்குப் பின், அங்கிருந்து அமிர்தசரஸ் திரும்பத் திட்டமிட்டிருந்தார்.தாமதமானதால் விஜய்யும் அவருடைய குடும்பமும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மறுநாள் வேறொரு ஏர் ஏசியா விமானத்தின் மூலம் அமிர்தசரசுக்கு சென்றனர். வழியில் \'சீஸ்\' ரொட்டியைக் கேட்டிருந்த அவருக்கு மாமிசத்துடன் ரொட்டி கொடுக்கப்பட்டது. இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த விஜய்யும் அவரது குடும்பத்தினரும் இழப்பீடு கோரி பாஞ்குலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் குடும்பத்தாருக்கு 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஏர் ஏசியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

மூலக்கதை