பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் பெடரர்

தினகரன்  தினகரன்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் பெடரர்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் லாரென்சோ சொனெகோவுடன் நேற்று மோதிய பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர்கள் ஸ்டெபனா சிட்சிபாஸ் (கிரீஸ்), கெய் நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் 1-6, 3-6, 1-6 என்ற நேர் செட்களில் பொலிவியாவின் ஹுகோ டெல்லியனிடம் வீழ்ந்தார்.கெர்பர் அதிர்ச்சி: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பொடபோவாவிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஸ்பெயின் நட்சத்திரம் கார்பினி முகுருசா தனது முதல் சுற்றில் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்டை 2 மணி நேரம் போராடி வென்றார்.

மூலக்கதை