மழையால் ஆட்டங்கள் பாதிப்பு

தினகரன்  தினகரன்
மழையால் ஆட்டங்கள் பாதிப்பு

ஐசிசி உலக கோப்பையில் நேற்று நடந்த 2 பயிற்சி ஆட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டன. வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளிடையே கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தி நடைபெற இருந்த போட்டி ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.* மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதின. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க பேட்டிங்கின்போது மழை கொட்டியதை அடுத்து, தலா 31 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். 12.4 ஓவரில் தென் ஆப்ரிக்கா விக்கெட் இழப்பின்றி 95 ரன் எடுத்திருந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்ததால் ஆட்டம் ரத்தானது (நோ ரிசல்ட்). ஹாஷிம் அம்லா 51 ரன், டி காக் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை காரணமாக பயிற்சி ஆட்டங்கள் பாதிக்கப்பட்டது இந்த அணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலக்கதை