பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து

தினமலர்  தினமலர்

திபெத்:இந்திய பிரதமராக மீண்டும் தேர்வான மோடிக்கு புத்த மத தலைவர் தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து கடிதம்:லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் தே.ஜ.கூட்டணிக்கு வாழ்த்துக்கள். உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகரமாக கையாளவும் இந்திய மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்றவும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். பிரமாண்ட வெற்றியின் மூலம் நேரு இந்திராவுக்குப்பின் ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும் மெஜாரிட்டியுடன் தேர்வான பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.இந்தியா ஒரு தொன்மையான நாடு. அகிம்சையை உலகுக்கு போதித்த நாடு. இந்தியாவின் மீது திபெத் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். நான் திபெத்தில் இருந்து வெளியேறி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. திபெத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு திபெத் மக்கள் சார்பில் நன்றி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை