அதிவேக, 'புல்லட்' ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்

தினமலர்  தினமலர்

டோக்கியோ:ஜப்பானில், மணிக்கு, 360 கி.மீ., வேகத்தில் செல்லும், 'என்-700' என்ற புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது.
அடுத்த ஆண்டு, ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜே.ஆர்.சென்ட்ரல் நிறுவனம், 220 கோடி டாலர் செலவில், புதுமையான வடிவமைப்புடன், அதிவேக புல்லட் ரயிலை உருவாக்கியுள்ளது.குறைந்த எடை, மின் சிக்கனம், நிலநடுக்கத்தை தாங்கும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புல்லட் ரயிலில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த ரயிலின் சோதனை ஓட்டம், மைபரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையே துவங்கியது. 'அடுத்த மாதம் வரை, புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பின், பயணியர் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். 'அப்போது, மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படும்' என, ஜே.ஆர்.சென்ட்ரல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இரு வாரங்களுக்கு முன், ஜப்பானில், மணிக்கு, 400 கி.மீ., வேகத்தில் செல்லும், 'ஆல்பா - எக்ஸ்' புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது. இந்த ரயில், 2030ல், பொது போக்குவரத்து சேவைக்கு வரும் போது, உலகின் வேகமான புல்லட் ரயில் என்ற சிறப்பை பெறும்.ஜப்பானில், 1964ல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது தான், முதன் முதலாக, அதிவேக புல்லட் ரயில் போக்குவரத்து அறிமுகமானது.

மூலக்கதை