4,375 கோடி முதலீடு வாபஸ்

தினகரன்  தினகரன்
4,375 கோடி முதலீடு வாபஸ்

மும்பை: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் இதுவரை ₹4,375 கோடியை வாபஸ் பெற்றுள்ளனர்.இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. மீண்டும் பெரும்பான்மை பலம் மிக்க ஆட்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் முதலீட்டாளர்களுக்கு இருந்தது. இதனால், வெளிநாட்டு வர்த்தக  முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் இருந்து பெரும்பாலும் முதலீட்டை விலக்கி வந்தனர்.  இந்த மாதம் கடந்த 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை மொத்தம் ₹4,375.86 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாபஸ் பெற்றனர். இதில் பங்குச்சந்தையில் ₹2,048 மற்றும் கடன் சந்தையில் ₹2,309.86 அடங்கும். தேர்தல் முடிவு வெளியான  23ம் தேதி மட்டும் அதிகபட்சமாக ₹1,352.20 கோடி முதலீடு செய்தனர். இதற்கு முன்பு ஏப்ரலில் ₹16,093 கோடி, மார்ச் மாதம் ₹45,981 கோடி, பிப்ரவரியில் ₹11,182 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தனர்.

மூலக்கதை