11.38 லட்சம் பேருக்கு வேலை

தினகரன்  தினகரன்
11.38 லட்சம் பேருக்கு வேலை

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் 11.38 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் ஈட்டுறுதி கழக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (இஎஸ்ஐ) சமீபத்திய புள்ளி விவரப்படி, கடந்த 2018-19 நிதியாண்டில் அமைப்பு சார்ந்த துறைகளில் 1.48 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 67.59 லட்சம் பேர், சமூக பாதுகாப்பு  திட்டங்களில் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் 11.38 லட்சம் தொழிலாளர்கள் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று, இஎஸ்ஐ பலன்களில் சேர்ந்துள்ளனர். இதற்கு முந்தைய மாதத்தில் இந்த எண்ணிக்கை 11.02 லட்சமாக இருந்தது என இஎஸ்ஐ  புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை