சூரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
சூரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மோடி பேச்சு

அகமதாபாத்: சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை கூறினார். முன்னதாக பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தில் பாஜக தொண்டர்கள் முழக்கமிடுவது மேற்கு வங்கம் வரை கேட்க வேண்டும்; மேற்குவங்கத்திற்கு கேட்குமாறு முழக்கமிடுங்கள் என்றார்.

மூலக்கதை