உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று கடந்த 2 வாரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று கடந்த 2 வாரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

நேபால்: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று கடந்த 2 வாரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ற பருவகாலம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மலையேற்ற வீரர்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் வந்துள்ளதால் அங்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காத்திருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் வாயு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பிராண வாயு பற்றாக்குறையால் கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரும் அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்தனர்.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் எவரெஸ்ட் சிகரம் அருகே சென்று கொண்டிருந்த அயர்லாந்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். மேலும் நேற்று முன்தினம் இங்கிலாந்தைச் சேர்ந்த மேலும் இரு வீரர்கள் பனிச்சரிவில் விழுந்து உயிரிழந்தனர். இதனையடுத்து எவரெஸ்ட் ஏறமுயன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பலியான வீரர்களின் உடல்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

மூலக்கதை