கேரள கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்?... கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு...!

தினகரன்  தினகரன்
கேரள கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்?... கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பு...!

கேரளா: கேரளக் அருகே கச்சத்திவு மற்றும் மினிகாய் தீவு அருகே மர்ம படகு ஒன்று சென்று வருவதாகவும், இது ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு: இலங்கையில் கடந்த மாதம் அங்குள்ள கிருஸ்தவ தேவாலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. குறிப்பாக ஈஸ்டர் பண்டிகை தினத்தில் இந்த  வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 300-க்கும் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஐ.எஸ். தீவிரவாதிகள் என்பது உறுதியானது. இது தொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து இலங்கையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழகம் மற்றும்  கேரளாவில் உள்ள தொடர்பு குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள எல்லையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்? இந்த நிலையில் இலங்கையில் இருத்து மர்ம படகு இந்தியாவுக்கு சொந்தமான கடல் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இலங்கையில் இருந்து ஒரு வெள்ளை படகில் 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் இடம்பெற்ற படகு புறப்பட்டு சென்றிருக்கிறது. அது கேரளாவுக்கு அருகில் உள்ள லட்சத்திவு, மினிக்காய் தீவை நோக்கி செல்வதாகவே ரகசிய தகவல் தெரிவிக்கின்றது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கண்காணிப்பு; இதனை தொடர்ந்து கேரள போலீசார் முழு அளவில் உஷார் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அங்கு கடலோர பகுதிகளில் கண்காணிப்பு திறப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருவனந்தபுரம் உள்ளட்ட இடங்களில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மர்ம படகு மினிக்காய் தீவு, லட்சத்திவை நோக்கி செல்வதற்கான என்ன காரணம், அந்த படகில் இருப்பவர்கள் தற்கொலை படையினரா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பெரிய தாக்குதல் திட்டத்துடன் அவர்கள் இந்த இரண்டு தீவுகளை நோக்கி பயணிக்கலாம் என கோரப்படுவதன் காரணமாக தற்போது அவர்கள் கேரள கடல் வழியாகவே இந்த தீவுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதன் காரணமாக கேரள போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். எனவே கேரளாவைச் சேந்த காவல் அதிகாரிகள், கடலோர பகுதியில் உள்ள 72 காவல் நிலையங்கள் மற்றும் 580 கி.மீட்டர் கடலோர பகுதிகளை முழு அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் லட்சத்திவு, மினிக்காய் தீவு பகுதிகளை சுற்றி இந்திய கடலோர படை, கடலோர காவல் படை கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஹாலிகாப்ட்டர்களும் வானில் வட்டமடித்து மர்ம படகுகளை தொடர்நது தேடி வருகின்றனர். இதே போன்று இந்த மர்ம படகு தமிழக கடலோர பகுதியில் வந்துவிட கூடாது என்பதற்காக கேரளாவை தொடர்ந்து தமிழக கடற்பகுதியில் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை