பாகிஸ்தான் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாபர் ஆஸம் 112, சோயிப் மாலிக் 44, இமாம் உல் ஹக் 32 ரன் விளாசினர். ஆப்கன் பந்துவீச்சில் முகமது நபி 3, தவ்லத், ரஷித் கான் தலா 2, ஹமித், அப்தாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 49.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஹஸ்மதுல்லா ஷாகிதி ஆட்டமிழக்காமல் 74 ரன் விளாசினார். ஷாஷத் 23, ஹஸ்ரதுல்லா 49, ரகமத் ஷா 32, ஷின்வாரி 22, முகமது நபி 34 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ரியாஸ் 3, இமத் வாசிம் 2, ஷதாப், ஹஸ்னைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது பாகிஸ்தான் அணிக்கும் அந்நாட்டு ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மூலக்கதை