பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து மோதல்

தினகரன்  தினகரன்
பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியாநியூசிலாந்து மோதல்

லண்டன்: உலக கோப்பைக்கு முன்னோட்டமாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் பயிற்சி ஆட்டத்தில் இன்று  விளையாட உள்ளன.உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இம்மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இந்தியா உட்பட உலக கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் அணிகளும் லண்டன் சென்றுள்ளன. உலக கோப்பையில் விளையாடுவதற்கு  முன்பு ஒவ்வொரு அணியும்  தலா 2 நாடுகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்தியா இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் லண்டன் ஓவல் அரங்கில் விளையாட உள்ளது.மற்ற அணிகள் உலக கோப்பைக்கு முன்னதாக பயிற்சி முகாம்கள், ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றன.ஆனால் இந்தியா அணி ஐபிஎல் போட்டியில் விளையாடியதே போதும் என்று  இங்கிலாந்து சென்று இறங்கியுள்ளது. அதனால் இன்று   நடைபெற உள்ள ஆட்டம் பயிற்சி ஆட்டமாக மட்டுமின்றி இந்தியா தனது திறமையை சோதித்து பார்க்கும்  ஆட்டமாகவும் இருக்கும்.இது வரை இந்த அணிகள்  விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிதான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில்  நியூசிலாந்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில்  வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.பயிற்சி ஆட்டத்தில் தங்கள் திறமையை காட்ட இன்று களமிறங்கும் இந்த 2 அணிகளும் உலக கோப்பை போட்டியில் ஜூன் 13ம் தேதி மோத உள்ளன. இந்தியா தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மே 28ம் தேதி விளையாட  உளளது.இந்த பயிற்சிப் போட்டிகள் உலக கோப்பையில் ஆடும் அணியில் யாருக்கு இடம் என்பதை உறுதி செய்யும் ஆட்டங்களாக இருக்கும். வீரர்கள் பட்டியல்இந்தியா: விராட் கோஹ்லி(கேப்டன்), தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரோகித் சர்மா, எம்எஸ் டோனி, ஷிகர் தவான், ரவீந்திர ஜடஜா,  லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார்,  ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, குல்தீப்  யாதவ், கேதர் ஜாதவ், யஜ்வேந்திர சாஹல். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் பிளன்டெல், மாட் ஹென்றி,  டாம் லோத்தம், காலின் மன்றோ,  ஜிம்மி நீஷம், ஹென்றி நிகோலஸ், மிட்செல் சான்ட்னர்,  டிரன்ட் போல்ட், கொலின் டீ கிராண்ட்ஹோம்,  லாக்கி பெர்கூசன்,  மார்டின் குப்தில், இஷ் சோதி, டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர்.

மூலக்கதை